Green Movement launched by Shanmuga Hospital

 In News Room

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கத்தை தொடங்கிய சண்முகா மருத்துவமனை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், சண்முகா மருத்துவமனை சார்பில் சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு. லலித் ஆதித்யா நீலம் (IAS) மற்றும் சேலம் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, இப்பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

மேலும், சண்முகா மருத்துவமனையின் நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முதல் கட்டமாக மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நகரின் பசுமை வளத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அவசியம்” என்ற எண்ணத்துடன், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பல்வேறு முன்னெடுப்புகளை சண்முகா மருத்துவமனை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

“மரம் வளர்ப்போம்… பசுமையான சேலத்தை உருவாக்குவோம்!”